சீருடைக்கான பண வவுச்சர்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதிகளை நோக்கும் போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை புலப்படுவதாகவும், இதனூடாக மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
450 ரூபாவில் சிறியளவு புடைவையேனும் கொள்வனவு செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, அனைத்து அமைச்சர்களும் கூடி கலந்துரையாடி அனைத்து மாணவர்களுக்கும் சீருடைக்கான ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.


0 Comments