Subscribe Us

header ads

ஓடும் ரயிலில் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இராணுவத்தினர்


ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து இராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த திங்கள் அன்று ஹவ்ரா-அமிர்தசரஸ் ரயிலில் பயணம் செய்த தன் மகளைக் காணவில்லை என்று அந்த சிறுமியின் தந்தை ரயில்வே பொலிசில் கொடுத்த புகாரின் பேரில், சிறுமியை தேடிய பொலிசார் அவரின் கோலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 


தனக்கு நடந்த கொடூரம் குறித்து ரயில்வே பொலிசாரிடம் அந்த சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தில், பயணத்தின் போது ஒரு இராணுவ வீரர் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்ததாகவும் இருவர் தன்னை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 


உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் மது ஊற்றிக் கொடுத்த இராணுவ வீரரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள இரு இராணுவ வீரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 


பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments