இந்தியாவில் எத்தனை பிச்சைக்காரர்கள் உள்ளனர்? அவர்கள் ஏன் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்தனர்? என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
நாடெங்கும் நடத்தப்பட்ட அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன் விபரம் வருமாறு:–
இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சுத்து 72 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 79,415 பேர் படித்த பிச்சைக்காரர்கள்.
இவர்களில் 3 ஆயிரத்து 10 பிச்சைக்காரர்கள் பட்டதாரிகள் ஆவார்கள். குடும்பத் தகராறில் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களுக்கு சென்று பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் பேசி இவர்கள் எளிதாக பிச்சை எடுக்கிறார்கள்.
பட்டதாரி பிச்சைக்காரர்களில் 2600 பேர் கலை, அறிவியல் பட்டதாரிகள். 410 பேர் என்ஜினீயரிங் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.
பட்டதாரி பிச்சைக்காரர்களில் 745 பெண்களும் அடங்குவார்கள். படித்திருந்தும் மனதுக்கு பிடித்த வீடு வேலை கிடைக்காததால் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்து விட்டதாக அந்த பெண் பட்டதாரிகள் கூறியுள்ளனர்.
பட்டதாரி பிச்சைக்காரர்களில் மேற்கு வங்க மாநிலம் 540 பேருடன் முதலிடத்தில் உள்ளது. மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த இடங்களில் உள்ளன. கேரளாவிலும் 24 படித்த பிச்சைக்காரர்கள் உள்ளனர்.
வடகிழக்கு மற்றும் தமிழ்நாட்டில் படித்த பிச்சைக்காரர்கள் அவ்வளவாக இல்லை.
இந்தியாவிலேயே அதிக பிச்சைக்காரர்கள் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் தான் உள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


0 Comments