Subscribe Us

header ads

முஸ்லிம் வீட்டில் தற்கொலை அங்கியா?- ஞானசார தேரரிடம் விசாரணை நடத்துமாறு முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை

கொழும்பின் புறநகர் தெஹிவளை கவுடான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் வீடு ஒன்றில் இருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள பொய்யான தகவல் குறித்து விசாரணை செய்யுமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகள் இலங்கையில் சர்வதேச தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஞானசார தேரர் நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இறுவெட்டும் தம்முடன் உள்ளதாக இலங்கை முஸ்லிம் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

இது முழுமையான பொய்யான குற்றச்சாட்டாகும்.

எனவே கலகொடஅத்தே ஞானசார தேரர் மீது விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கவுன்ஸில் கோரியுள்ளது.


Post a Comment

0 Comments