வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அந்த பிரதேசத்துக்கு சொந்தக்காரர்கள் என்பதை எவரும் மறந்து பேசமுடியாது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அவர்களின் காணிகளை துப்பரவு செய்கின்ற போது அதற்கு எதிராக இனவாதம் பேசுவது என்ன தர்மம் என்று கேள்வி எழுப்பினார்.
மகாவலி,சுற்றாடல்,நீ்ர்வழங்கள், வடிகாலமைப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் –
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்கள் வனவளத்தினால் எல்லையிடப்பட்டுள்ளது..6 ஆயிரத்துக்கும் அதிமான ஹெக்டயர் காணி வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.மறிச்சு க்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்கள் வனவளத்தினால் எல்லையிடப்பட்டுள்ளது.இந்த காணிகள் முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகளாகும்.இதில் பாடசாலைகள்,வர்த்தக நிலையங்கள் என்பன காணப்படுகின்றன.இந்த காணியினை 2012 ஆம் ஆண்டு வனவளத் துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டது.
இனவாதிகளும்,மதவாதிகளும் முஸ்லிம்களும்,நானும் வில்பத்து காணிகளை பிடிப்பதாக கூக்குரலிடுகின்றனர்.வில்பத்து காணியில் ஒரு அங்குளத்தையேனும்,நனோ,எனது மக்களோ பிடிக்கவில்லை என்பதை உறுதியாக இந்த சபையில் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்..எமது சமூகம் தொடர்பில் பிழையான கருத்துக்களை ஊடகங்கள் சில முன்னெடுக்கின்றன.சில சுற்றாடலியளாலர்கள் என்று கூறுபவர்கள் யார் என்பதை நாம் அறிவோம்,இனவாதிகளினதும்,சர்வதேச நிதி நிறுவனங்களினதும் தரககர்களாக செயற்படுபவர்ளே இந்த அநியாயத்தை செய்கின்றனர்.
இந்த சபையில் உள்ளவர்களிடத்தில் சவால் விடுகின்றேன்.அவ்வாறு நானோ ,எனது சமூகமோ வில்பத்துக்குள் காணிகளை பிடிப்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால்விடுப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றும் போது கூறினார்.
-Irshath Rahumathullah-


0 Comments