இலங்கையில் ஸிஆக்களுக்கு எதிராக பேசுவதற்கு உலமாக்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது என ஓட்டமாவடியைச் சேர்ந்த இத்ரீஸ் நழீமி தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை(6.12.2015) மாலை மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்திய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கோம்பை எஸ்.அன்வர் அவர்கள் தயாரித்த இந்திய முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான படம் திரையிட்ட வைபவத்தின் போதே ஓட்டமாவடியைச் சேர்ந்த இத்ரீஸ் நழீமி மேற்கண்டவாறு கூறினார்.
மகுடம் அமைப்பின் ஏற்பாட்டில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஊடகவியலாளர்கள் முக்கியஸ்தர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இந்திய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கோம்பை எஸ்.அன்வர் அவர்கள் தயாரித்த இந்திய முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான படம் காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த படம் தொடர்பான பார்வையாளர் கருத்துக்களை கூறுமாறு நிகழ்வின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு கூறினார்.
இதையடுத்து இந்த படம் தொடர்பான பார்வையாளர் கருத்துக்களை கூறுமாறு நிகழ்வின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு கூறினார்.
இதையடுத்து சபையோர் தமது கருத்துக்களை அங்கு பகிர்ந்து கொண்டதுடன் இந்திய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கோம்பை எஸ்.அன்வர் அவர்களின் முயற்சியை பாராட்டினாhர்கள்.
இதன் போது ஓட்டமாவடியைச் சேர்ந்த இத்ரீஸ் நழீமி கருத்து தெரிவித்தார். அவர் கருத்து தெரிவிக்கையில் சஊதி அரேபியா இலங்கையில் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குலைத்தது அத்தோடு இலங்கையில் ஷPஆக்களுக்கு எதிராக பேசுவதற்கு உலமாக்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது.
ஸிஆக்களுக்கு எதிராக பேசுவதற்காக ஒவ்வொரு உலமாவுக்கும் பத்தாயிரம் ரூபா பணம் வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
இவர் பேசி முடிக்க அங்கிருந்த சிரேஷ;ட ஊடகவியலாளரும் கவிஞருமான ரீ.எல்.ஜௌபர்கான் இத்ரீஸ் நழீமியின் பேச்சை ஆவேசமாக கண்டித்தார். இத்ரீஸ் நழீமியின் பேச்சுடன் நாங்கள் இங்கிருக்கின்ற எந்த ஒரு முஸ்லிமுக்கு உடன்பாடில்லை என்றும் ஆவேசமாக ஜௌபர்கான் கூறினார்.
இத்ரீஸ் நழீமி முஸ்லிம் சமூகத்தை இங்கு காட்டி கொடுத்து விட்டார் எனவும் ஊடகவியலாளர் ஜௌபர்கான் உரத்த தொனியில் மேலும் கூறினார்

0 Comments