
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யுத்தக் காலத்தில் முஸ்லிம் மக்கள் வடப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர்கள் புத்தளம் நோக்கி வருகைத் தந்து குடியேறியிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களை நோக்கி குறித்த முஸ்லிம் மக்கள் வருகைத் தந்து குடியேறுகின்ற நிலையிலேயே, வில்பத்து வனப் பகுதி அழிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டார்.
தமது சொந்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுகின்றமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் கூறினார்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவதாக கூறிய அமைச்சர், வில்பத்து வனப் பகுதி அழிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
0 Comments