Subscribe Us

header ads

கைப்பேசியால் சிதறிய கவனம்: மலை உச்சியிலிருந்து விழுந்து உயிரிழந்த வாலிபர் (படங்கள் இணைப்பு)


அமெரிக்க நாட்டில் வாலிபர் ஒருவர் கைப்பேசியை பயன்படுத்தியவாறு சென்றபோது எதிர்பாராதவிதமாக மலை உச்சியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சான் டியாகோ என்ற நகரில் உள்ள Sunset Cliffs என்ற சிறிய சுற்றுலா மலைப்பகுதி மிக பிரபலமானது ஆகும்.
கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நாட்களை கொண்டாட ஆயிரக்கணக்கான நபர்கள் இப்பகுதியில் கூடுவார்கள்.
இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதற்காக 30 வயதான நபர் ஒருவர் இந்த பகுதிக்கு நேற்று மாலை நேரத்தில் சென்றுள்ளார்.
சுமார் 60 அடி உயரமுள்ள அந்த உச்சியின் மேல் உள்ள பரப்பில் கைப்பேசியை பயன்படுத்தியவாறு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, எதிரே அதாள பள்ளம் இருந்ததை காணாத அவர், திடீரென தலைகீழாக விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், நபரை கண்டுபிடித்து மேலே தூக்கியபோது அவர் பலத்த காயங்களால் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து பேசிய பெண்மணி ஒருவர், ‘வாலிபர் நடந்து சென்றபோது அவர் தரையை பார்க்கவில்லை. மாறாக, கையில் இருந்த கைப்பேசியை பார்த்தவாறு சென்று அந்த பள்ளத்தில் விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments