Subscribe Us

header ads

சென்னை மக்களுக்கு மும்பை ஆட்டோ டிரைவர் செய்த உதவி: மனதை நெகிழ வைக்கும் மனிதம்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உதவிகள் குவிந்து வரும் நிலையில், மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் செய்த உதவி சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மும்பையில் டிசைனராக வேலை பார்ப்பவர் ஷாலினி கிரிஷ், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அதிர்ந்த அலைபேசியின் அழைப்பை ஏற்ற அவர் பதட்டத்துடன் தமிழில் ஏதோ பேசினார். பேசி முடித்தவுடன்... மயான அமைதி....

சில நொடிகள் கழித்து அந்த ஆட்டோவின் டிரைவர் “மேடம், அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா.. ஒன்னும் பிரச்சனையில்லையே?” ("Madam, aapke pehchaan valey sab theek hain?) என்று கேட்கிறார்.

யாரிடமாவது பேச வேண்டிய அவசரத்தில் இருந்த ஷாலினியும், சென்னை வெள்ளத்தைப் பற்றி இடைவிடாது பேசிக் கொண்டே இருக்கிறார். இதற்குள் அவரது வீடு வந்து விட்டது. இறங்கி ஹேண்ட் பேகிலிருந்து பணத்தை எடுத்து நீட்டுவதற்குள், “மேடம், இதை எந்த வழியிலாவது சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்துங்கள். நான் ரொம்ப ஏழ்மையானவன். என்னால் இவ்வளவுதான் முடியும்... அல்லா அவர்களைப் பாதுகாக்கட்டும்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சிலையாய் அந்த இடத்திலேயே உறைந்து போய் நின்ற ஷாலினி தனது இந்த அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 


Post a Comment

0 Comments