கற்பிட்டி கண்டல்குழி பிரதேசத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்ககளை பார்வையிடுவதற்காக கற்பிட்டி UDF நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்கள் அம்மக்களின் பிரச்சினைகளை கண்டறிய அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்தார்.
அங்கு நிலவுகின்ற வெள்ள நிலைமையை சீரமைப்பதற்காக கற்பிட்டி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளை அணுகி மண் , ட்ரக்டர்,மற்றும் JCB (பெகோ)போன்றவைகளின் உதவியுடன் அம்மக்களுக்கு முடியுமான அளவு அவ்வெள்ளத்தை கட்டுப்படடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மேலும்கற்பிட்டி,கண்டல்குழி,முசல்பிட்டி,ஏத்தாலை,திகழி,தேத்தாபொல,நுரைச்சோலைஇன்னும் சில கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உணவுப்பொதிகளை கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவியிடம் A.R.M முஸம்மில் அவர்கள் வேண்டுகோள் விடுத்தமைக்கினங்க அந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவியவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அவர்களை பாராளுமன்றத்தில் சந்தித்து இப்பிரச்சினைக்கு அத்தியவசிய தேவைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.அதற்கினங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அம்மக்களுக்ககு அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்கு தமது அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக தங்கள் பிரதேச கிராம உத்தியோகத்தர்களை அணுகி உங்களுடைய நிவாரனங்ளை பெற்றுக்கொள்ள ஆவனம் செய்யப்பட்டுள்ளதாக UDF நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் தெரிவித்துள்ளார்.







0 Comments