தாய்லாந்தை பூமிபால் அதுல்யாதெச் என்பவர் ஆட்சி செய்து வருகிறார், இந்நாட்டில் மன்னரை கிண்டல் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.
இந்நிலையில், தானாகொர்ன் சிரிபைபூன் என்ற தொழிலாளி மன்னரின் நாயை கிண்டல் செய்து இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார், ஆனால், இவர் எவ்வாறு கிண்டல் செய்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக தொழிலாளியின் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 37 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து தொழிலாளியின் வழக்கறிஞர் கூறியதாவது, மன்னரின் நாய்க்காக சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது முட்டாள்தனமான ஒன்றாகும். இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

0 Comments