Subscribe Us

header ads

'போர்ப்பகுதிகளில் இந்த ஆண்டு 16 மிலியன் குழந்தைகள் பிறப்பு'

இந்த ஆண்டு மட்டும் போர் நடக்கும் பகுதிகளில் 16 மிலியன் குழந்தைகள் பிறந்ததாக ஐநா மன்ற சிறுவர் நிதியம், யுனிசெஃப், கூறுகிறது. இது உலகில் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளில் எட்டில் ஒரு பங்காகும்.

இந்தக் குழந்தைகள் ஐந்து வயது அடைவதற்கு முன்னரே இறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமிருப்பதாக யுனிசெஃப் எச்சரித்தது.
அதைத் தாண்டி உயிருடன் இருக்கும் குழந்தைகள் அவர்களின் உணர்வு ரீதியான மேம்பாடு பாதிக்கப்படும் அளவுக்கான அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும் என்று அது கூறியது.
குழந்தைகள் பாதுகாப்புக்கு முந்துரிமை தருமாறு சர்வதேச சமூகத்தை யுனிசெஃப் கோரியது.

Post a Comment

0 Comments