ஓர் இனவாதத்தினை மாத்திரம் கொள்கையாகவும் அடிப்படைவாதகமாகவும் கக்கி வந்ததோர் அமைப்பு தற்பொழுது இந்த அமைப்பு தற்பொழுது அதனை மீண்டும் கையிலேடுத்து அதன் செயலாளர் ஞானசார இனவாதத்தினை மாத்திரம் கக்கிக் கொண்டுவருகிறார். .
இதற்கு முன் இருந்த மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியது பொதுபலசென என்ற அமைப்பின் செயலாளர் ஞானசாரவின் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுதான் பிரதான காரணகர்த்வாக இருந்தது என்பதை இன்றைய பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச உட்பட சிறுபான்மை இனத்தவர்கள் எந்த விதத்திலும் மறுக்கவும் மறுப்பினைத் தெரிவிக்கவும் முன்வரமாட்டார்கள்.
இதனாலேயே இன்றைய ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிமாற்றத்திற்கு அனைத்து சிறு பான்மை மக்களும் கைகோர்த்து பாரிய எதிர்பார்ப்புடன் மத்தியில் ஆட்சி பீடம் ஏற்றக் காரணமும் இந்த ஞானசார எனும் இனவாதத்தினை தூண்டும் செயற்பாட்டில் களம் இறங்கிய போது மஹிந்த அரசாங்கம் அவர்களை சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுவே காரணமாகும்.
ஆனால் இன்று சிறுபான்மை மக்களுக்கு அரங்கேறும் இனவாதத்தினை தூண்டிவிடும்படலம் வெளிப்படையாக ஆரம்பம் ஆகின்றது . இந்த நல்லாட்சியை வரவேற்ற மக்கள் இதே நல்லாட்சி விமர்சனத்திற்கு உட்படுத்தவும் தயங்க மாட்டார்கள் . மேலும் மஹிந்தவின் ஆட்சியில் வெளிப்படையாகவும் மைதிரியின் ஆட்சியில் மறைமுகமாகவும் செயற்படுகின்றதா என்பதை ஒவ்வோர் சிறுபான்மை மக்கள் மனங்களின் கேள்விகளாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது
‘மரத்தால் விழுந்தவனை மாடு குத்தியது போன்று’ இன்றைய ஞானசாரவின் செயற்பாடுகள் மூலம் ஒவ்வோர் அரசாங்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.
ஞானசார என்ற இனவாதத்தை தூண்டும் செயற்பாடு ஆனது நாட்டின் இறைமைக்கும் தேசியத்தின் குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே செயற்பாடுகள் காணப்படுகின்றது. இதனை தவிர இனப்பிரச்சினை ஒன்று தோன்றுவதனை தடுக்கும் வகையிலாக அமைவுகளாக இல்லை மாறாக சகோதரத்துவமாக வாழுகின்ற மக்களுக்குள் இனவாதம் என்கிற நஞ்சை மெதுவிக விதைத்து வருகின்றது
ஞானசார முதலில் கையிலெடுத்த மார்க்கம் இஸ்லாம் ஆனால் இஸ்லாத்தின் புனித குர்ஆனை ஏதோ கடையில் சிறுகதைப் புத்தத்தில் பிழைபிடித்து திறுத்துவது என்று நினைத்துவிட்டாரோ என்பதுதான் இங்கு வேடிக்கையாக உள்ளது.
இந்த புனித அல்குர்ஆன் ஆனது இறக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த அறபிய மக்கள் கவிதைபாங்கிலும் மற்றும் அறபிய இலக்கணத்திலும் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார்கள்.
ஆகவே அந்த அறபியர்களும் விளங்கிக் கொள்ளும் வகையிலும் எக்காலத்திற்கும் பொறுந்தக் கூடிய வகையிலேயே அல்குர்ஆன் அருளப்பட்டுள்ளது. என்பதைனையும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் மார்க்கத்தை படிப்பதற்கோ பிழைகளைக் கண்டு பிடிக்கவோ முதலில் எமது மார்க்க அறீஞரை நாடி முறையாகக் கற்க வேண்டும்
.
அதை விடுத்து ஞானசார நினைக்கும் சிறுகதைப் புத்தகம் இல்லை இது.
ஞானசார சில இஸ்லாமிய சகோதரர்களை ஆதரமாகவும் காட்டலாம் நீங்கள் காட்டும் ஆதாரம் வேறு நாங்கள் நீங்கள் சொல்வது முஸ்லிம் என்ற நாமங்களுடன் செல்லும் முத்திரைகளை நாங்கள் புனித அல்குர்ஆன் வளிநடக்கும் முஸ்லிம்களை இதனை தெளிவாக புரிந்து கொள்ள மார்க்க அறிஞர் முதலில் நாடுங்கள்.
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அனைக்க நினைக்கின்றனர் ( தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தன் ஒளியை முழுமைப் படுத்தாமல் விடமாட்டான் ( அல்குர்ஆன். )
ஆகவே ஞானசாரவை இதற்கு மேல் இந்த நல்லாட்சி அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது அவ்வாறு அனுமதி வழங்கப்படுமேயானால் இனக்கலவரத்துக்கு வழிவகுத்துச் செல்லும். இதில் எந்த விதமான தொரு ஐயப்பாடும் இல்லை


0 Comments