1856 : ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1905 : பிரான்ஸில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1917 : பலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1922 : போலந்தின் முதலாவது ஜனாதிபதியாக கப்ரியேல் நருட்டோவிச் தெரிவு செய்யப்பட்டார்.
1937 : ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின.
1940 : இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கின.
1941 : சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பைன்ஸ் ஆகியன ஜேர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தன.
1946 : இந்திய அரசியலமைப்புச் சபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1953 : அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1956 : கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 62 பேர் உயிரிழந்தனர்.
1971 : ஐ.நாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்தது.
1979 : பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
1986 : தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1987 : காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்டிஃபாடா கிளர்ச்சி ஆரம்பம்.
1990 : லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
1992 : பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
2003 : மொஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
2006 : மொஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.
2008 : அமெரிக்காவின் இலினோய்ஸ் மாநில ஆளுநர் ரொட் பிளாகோஜேவிக், செனட் சபை ஆசனத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.
2013 : இந்தோனேஷியாவில் எரிபொருள் தாங்கியொன்றுடன் ரயிலொன்று மோதியதால் 7 பேர் பலியானதுடன் 63 பேர் காயமடைந்தனர்.

0 Comments