Subscribe Us

இலங்கை பணிப் பெண்ணுக்கு சவூதியில் கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக கொழும்பில் ஒரு இலட்சம் கையெழுத்து வேட்டை

இலங்­கையைச் சேர்ந்த பெண்ணைக் கல் எறிந்து கொல்­லு­மாறு சவூதி அரே­பிய நீதி­மன்­றத்தால் வழங்­கப்­பட்ட தீர்ப்­பினை ஆட்­சே­பித்து கொழும்­பி­லுள்ள இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் முன்­பாக  நேற்றும் இன்றும் மனித உரிமை ஆர்­வ­லர்கள் ஏற்­பாட்டில் ஒரு இலட்சம் கையெ­ழுத்­து­களைப் பெறும் வேட்டை இடம் பெற்று வரு­கின்­றது.  

நேற்று நடை­பெற்ற கையெ­ழுத்து வேட்­டை­யின்­போது, மனித உரிமை ஆர்­வ­லர்கள் சார்­பாக அருட் சகோ­தரர் சக்தி வேல் கருத்து தெரி­விக்­கையில் “ கல் எறிந்து  கொல்­லப்­படவுள்ள தாயை மீட்­டெ­டுக்க தீர்க்­க­மான நட­வ­டிக்கை எடுப்­ப­துடன்,  மத்­திய கிழக்கு நாடு­களில் சிறைக் கூடங்­க­ளிலும் வீட்டுக் காவ­லிலும்  வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் உள்ள  அனை­வ­ரையும்  கண்­ட­றிய  நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்” என்றார். 

அத்­துடன், மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு  வேலை நிமித்தம் செல்­வோ­ருக்கு முன்பு அந்த நாடு பற்­றிய  உண்­மை­யான நிலை­மை­க­ளையும்  சட்­டத்­தையும்  பற்றியும் ஒரு தெளிவான அறிவை வழங்குவது அவசியம் எனவும் அவர் கூறினார்.

(அஷ்ரப் ஏ சமத்)

Post a Comment

0 Comments