Subscribe Us

header ads

எந்த அரசும் ஒதுக்காத தொகையை புதிய அரசு கல்விக்காக ஒதுக்கியுள்ளது!- ஜனாதிபதி (PHOTOS)

கல்விக்காக எந்த அரசாங்கமும் இதுவரை ஒதுக்காத நிதியை 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில தசாப்தங்களாக வருடாந்தம் ஒதுக்கப்பட்ட நிதியை விட 4 மடங்கு நிதி இம்முறை கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாலபேயில் பாடசாலை ஒன்றில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிள்ளைகள் சமூகத்தில் எதிர்நோக்கும் அனர்த்தங்களில் இருந்து அவர்களை தற்காத்து கொள்வதற்காக பெற்றோர், ஆசிரியர்கள் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி, நட்புறவுடன் பணியாற்றுவதை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும்.

மக்களுக்கு முடிந்தளவு அறிவை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கம் என்ற வகையில் அதன் ஆட்சியாளர்கள் நாட்டு பிள்ளைகளுக்கும் மக்களுக்கு வழங்கும் அளப்பரிய பங்களிப்பாகும்.

திடசங்கட்பத்துடனும் அர்ப்பணியுடனும் பிள்ளைகள் வாழ்க்கை வெற்றிகொள்ள வேண்டும்.

தன்னிடம் இருக்கும் தயக்கமின்மை, திடசங்கட்பம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை காரணமாகவே நாட்டின் சாதாரண குடிமகனாக இருந்த தன்னை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments