Subscribe Us

header ads

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கொடுக்கப்பட்ட அமைச்சுப் பதவி பற்றி முஸ்லிம்கள் பெருமைப் படவேண்டும் -மொஹிடீன் பாவா

தற்போதுள்ள அரசாங்கத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பதவியானது ஒரு நாட்டின் முதுகெலும்பான பொருளாதரத்தை கட்டி எழுப்புவதுக்கானதும் அதனுடன் மக்கள் வாழ்கைச் செலவீனத்தை  தீர்மானிக்கும் அச்சாணீயாகவும்  செயல் படக் கூடிய ஒரு பாரிய அமைச்சாகும், இவ்வாறன பாரிய அமைச்சு வேறு ஒரு முஸ்லிம் அமைச்சர்களுக்கும் கொடுக்கப் படவில்லை என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் 

மேலும் இவ் அமைச்சு   மீண்டும் அவரிடம் கொடுக்கப் பட்ட காரணம் முந்திய அரசாங்கத்தில் இதே அமைச்சை இவர் திறம் பட நடை முறைப் படுத்தியதும் ஒரு  முக்கிய காரணமாகும் என்றே கருத வேண்டியுள்ளது . அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு   கொடுக்கப்பட்ட அமைச்சுப் பதவி பற்றி இங்கு முஸ்லிம்கள் பெருமைப் படவேண்டும் .என.கூறினார் 

அவர் மேலும் கூறுகையில் தேர்தல் முடிந்து விட்டது ,ஒருவரை ஒருவர் தூற்றுவதும்,கடந்த கால விடையங்களை கிண்டுவதும் இன்னும் ஓயவில்லை. இது உண்மையில் கவலைக்கு இடமான ஒரு விடயம்.

இது ஒரு புறம் இருக்க , கிடைத்த அரசியல் அதிகாரத்தினை முடிந்த வரை பயன் படுத்திக் கொள்வதுதான் எமது புத்திசாலித் தனம்.அவ்வாறு பெற வேண்டுமெனின் சமூகத்திடம் கட்சி பேதம் அற்ற ஒற்றுமை வேண்டும். அவ்வாறு அல்லாது நாங்கள் தத் தமது கட்சியின் சேவைதான் வேண்டும் என்றால் எமது நிலைமை இலகு காத்த கிளியின் நிலைமைதான்.எமது பிடிவாதம் எமக்கு நஷ்டத்தைக் கொடுப்பது மட்டும் அல்லாது எமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் இதற்கு பலியாக வேண்டி வரும் 

உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொண்டு, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையாமல்  எதிர் வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரசஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களுடன் கைகோர்த்து நூறு வீத வெற்றி வாகை சூடி  உள்ளுராட்சி சபையை அலங்கரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு   கொடுக்கப்பட்ட அமைச்சுப் பதவி . பற்றி முஸ்லிம்கள் பெருமைப் படவேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் .

-NDPHR-

Post a Comment

0 Comments