Pass அமைப்பினர் (2008 G.C.E.O/L. Batch) தமது சமூகப் பணிகளில் ஒன்றாக புத்தளம் வெட்டுக்குளம் பள்ளிவாசலின் பிரதான வாயிலில் இருந்து பள்ளிக்கு பிரவேசிக்கும் பகுதியை பாதை வடிவில் கொன்க்ரீட் இட்டு வருகின்றனர். மாஷா அல்லாஹ்.
இதன் முக்கியத்துவம் குறித்து அண்மையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வமைப்பினர் மணல்குன்று பைதுஸ் சகாத் வீடமைப்புத் திட்டத்தில் முன்பள்ளியொன்றை அண்மையில் நிர்மாணித்துக் கொடுத்தனர். இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள வெட்டாலை அசன் குத்தூஸ் மு.வி மற்றும் வட்டக்கண்டல் மு.வி. மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்குகளையும் நடத்தினர்.
இவ்வமைப்பினர் செய்யும் நற்கருமங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
0 Comments