புத்தளம் தள வைத்தியசாலையில் கடந்த 8 வருடங்களாக வைத்தியசாலை செயலாளராக, பிரதான நிர்வாக முகாமைத்துவ உத்தியோகத்தராக அர்ப்பணத்துடன் சேவையாற்றிய எச்.எம். ஷபீக் (All Island JP) அதி விசேஷ சுப்ரா நிர்வாக சேவைப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்ததைத் தொடர்ந்து புத்தளம் நகர சபையின் புதிய நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 20.11.2015 வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்கிறார்.
1986 இல் புத்தளம் மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இலிகிதராக அரச நிர்வாகப் பணியில் இணைந்து கொண்ட ஷபீக் 1997 முதல் 2007 வரை உதவி நிதி முகாமையாளராக சிலாபம் வைத்தியசாலையில் சேவையாற்றினார்.
புத்தளத்தின் கல்வி, சமூக, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை நல்கிய அவர் மக்களின் தேவைகளை தனது சேவைகளாக கருதி கடந்த 30 வருடங்களாக அர்ப்பணத்துடன் செயற்பட்டு வருகிறார்.
புத்தளம் மக்களுக்கு இன மத மொழி வேறுபாடின்றி தனது சேவையை மேலும் சிறப்பாக வழங்க பொன்னானதொரு வாய்ப்பை தற்போது ஷபீக் பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
-Mohamed Muhsi-
0 Comments