Subscribe Us

header ads

ஒரு ரூபாய் கேட்ட சிறுவனை எட்டியுதைத்த பெண் அமைச்சர் (பரபரப்பான காணொளி)

இந்தியாவின் , மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு ரூபாய் பிச்சை கேட்ட சிறுவனை பெண்  அமைச்சர் ஒருவர் காலால் எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பன்னா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள்  பிரிக்கப்பட்டதன் தொடர்பான விழா ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய பிரதேச மாநில மூத்த பெண் அமைச்சர்  குசும் மெதிலேவின் காலைத் தொட்டு அந்த சிறுவன் பிச்சை கேட்டுள்ளார். 

 இதனால் ஆத்திரமுற்ற அமைச்சர் அவனை காலால் எட்டி உதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார்.

இந்த காணொளி நேற்று இணையங்களில் தீயா பரவத்தொடங்கியது. மேலும் அவருக்கு கடும் கண்டனங்கள் எழத் தொடங்கியுள்ளன.



Post a Comment

0 Comments