கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களால் கொழும்பில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் நாடு பூராகவும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசியல் அரங்கில் இவ்விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பற்றிய விசாரணைகளுக்காக பதில் காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோர் காவல்துறை ஆணைக்குழுவுக்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.
இதேவேளை , ஆர்ப்பாட்ட த்தின் போது தாக்குதலுக்குள்ளான சஷினி சந்தீபனி என்ற மாணவி நேற்று இரவு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை இத்தாக்குதல் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
0 Comments