Subscribe Us

header ads

உலக சாதனை படைத்த நிதி அமைச்சருக்கு டலஸ் அலகபெருமவினால் பாராட்டு

உலகத்திலே மிக நீளமான வரவு செலவினை நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது ஒரு உலக சாதனை எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிறுத்தப்படாமல் தொடர்ந்த மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு இதுவென வரலாற்றில் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே நேற்று வருகை தந்த தூதுவர்கள் தன்னிடம் உறுதி செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments