புத்தளம் கொழும்பு வீதியில் புளிச்சாக்குளம், தாரவில்லு பிரதான பாதையில் இன்று காலை (2015-11-15 ) ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் நீங்கி வாகனப் போக்குவரத்து வழமை நிலைக்கு வந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையதிதின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது பெய்துவரும் கடும் மழையினையடுத்து வீதியின் அருகில் இருந்த பாரிய மரமொன்று சரிந்ததால் வீதி போக்குவரத்து தடைப்பட்டது.இதனையடுத்து ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை ஊழியர்களின் துணையுடன்,இந்த மரத்தினை தரித்து அகற்ற சுமார் 1 மணிநேரம் சென்றதால் வாகன போக்குவரத்துக்கு தடையேற்பட்டதாகவும் மத்திய நிலையம் தெரிவித்தது.
அதே வேளை இராஜங்கனை,தப்போவ,மற்றும் தெதுரு ஓய நீரி்த்தேக்கங்களின் வான் கதவுகள் குறைந்த நீர் ஓட்டத்திற்காக திறக்கப்பட்டிருப்பதாவும்,மலை தொடருமெனில் மேலும் இந்த கதவுகளின் அளவு திறப்பின் அதிகரிப்பு ஏற்படும் என்றும் நீர்ப்பாசன நிலையங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மத்திய நிலையத்தின் அதிகாரி மேலும் கூறினார்.
அத்துடன் தெதுரு ஒயாவவின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவருவதால் சிலாபம் பகுதியின் பல பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர் நோக்க நேரிடும் என்றும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கிராம சேவகர்கள் ஊடாக பிரதேச மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்த பெய்து வரும் மழையினையடுத்து சிலாபம் பிபில்ல பிரதேசத்தில் வெள்ளத்தால் இடம் பெயர்ந்த 6 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அதே பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் அனர்த்த மத்திய நிலையத்தின் அதிகாரி மேலும் கூறினார்.
-இர்ஷாத் ரஹுமத்துல்லாஹ்-
-இர்ஷாத் ரஹுமத்துல்லாஹ்-
0 Comments