Subscribe Us

header ads

பிரபல சமூக வலைதளங்களான இவை அனைத்தும் உங்களை உளவு பார்க்கின்றன.

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், செய்தி தொடர்பு செயலியான வாட்ஸ் அப், கூகுள் தேடுபொறி ஆகியவை தனது பயனர்களை உளவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர்செக்யூரிட்டி நிறுவனமான அவாஸ்ட் மேற்கொண்ட ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக தெரிவித்த அவாஸ்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி வின்சென்ட் ஸ்டெக்லெர், தனது விளம்பர தேவைக்காக கூகுள் நிறுவனம் தனது பயனர்களை உளவு பார்ப்பதாக குறிப்பிட்டார்.

பயனர் என்ன தேடுகிறார் என்பதை பொறுத்து, விளம்பரங்கள் தெரிவதற்காக கூகுள் அவ்வாறு செய்கிறது என்றாலும், அது தொடர்பான விழிப்புணர்வு பயனர்கள் தெரிந்துக்கொள்வது அவசியம் என்றார் ஸ்டெக்லெர். அதேபோல், வாட்ஸ் அப் செயலியும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்கிப்பதாக ஸ்டெக்லெர் தெரிவிக்கிறார்.

வாட்ஸ் அப் மூலம் அனைத்து தொடர்புகளும் செல்பேசியில் இருந்து எடுத்துக்கொண்டு, ஃபேஸ்புக்கிற்கு தருகிறது. இந்த தகவல்களை பயன்படுத்தி, அந்த எண் பதிவு செய்யப்பட்டுள்ள ஃபேஸ்புக் கணக்கில், பயனர் அதிகம் பேசும் தகவல்களை கொண்டு தொடர்புடைய விளம்பரங்கள் தோன்றும் என்று ஸ்டெக்லெர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments