Subscribe Us

header ads

சோமவங்ச மற்றும் வீரவங்ச ஒன்றிணைந்தனர்!: காரணத்தையும் தெரிவித்தனர்....

1988 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போது, ரோஹன விஜேவீர உள்ளிட்ட பலர் உயிரிழந்து 26 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்பொருட்டு, ஜே.வி.பி. மற்றும் முற்போக்கு சோசலிச கட்சி ஆகியன ஏற்பாடு செய்துள்ள கார்த்திகை வீரர்கள் நினைவு நிகழ்வுகள் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளன.

எவ்வாறாயினும், ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகி புதிதாக ஸ்தாபித்த மக்கள் சேவை கட்சியின் கார்த்திகை வீரர்கள் தினம் நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் செயலாளர் சோமவங்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய சோமவங்ச அமரசிங்க, விமல் வீரவங்ச மற்றும் தமது ஒன்றிணைவுக்கு தமக்கு எதிரானவர்களே காரணம் என குறிப்பிட்டார்.

இந்தநிலையில், ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் நினைவு தினம் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று 3.30 அளவில் கொழும்பு விகாரமஹாதேவி திறந்த வெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ‘நீங்கள் இறந்து போகவில்லை’ என்ற தொனிப்பொருளில் முற்போக்கு சோசலிச கட்சியின் ஏற்பாட்டில் கார்த்திகை வீரர்கள் தினம் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளியரங்கில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments