இன்று விழவுள்ளதாக தெரிவிக்கப்படும் மர்மப்பொருள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தென் கடற் பிராந்தியத்திலிருந்து 62 கடல் மைல் தொலைவில் முற்பகல் 11.45 அளவில் வீழப் போகும் ஆகாய மர்மப்பொருள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் ஆய்வு நிபுணர் ஜனக அகஸ்சூரிய இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மர்மப் பொருள் தொடர்பாக எச்சரிக்கையுடன் செயற்பட்டால் மாத்திரமே போதுமானது என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இன்று பிற்பகல் 2 மணி வரை தெற்கு கடற்பிராந்தியத்தில் கடல் மற்றும் வான் போக்குவரத்து நடவடிக்கைளில் இருந்து விலகியிருக்குமாறு அந்த நிறுவனம் கோரியுள்ளது.
இதனிடையே, ஆதர் சி கிளாக் மத்திய நிலையமும், இலங்கை கோள்மண்டல நிலையமும் ஒன்றிணைந்து தங்காலையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகின்றன.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்றின் பகுதியே விண்வெளி கழிவு பொருளாக புவியின் காற்று மண்டலத்தில் நுழைந்துள்ளது.
1960 மற்றும் 70 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவை நோக்கி அனுப்பப்பட்ட விண்ணூர்தியின் பாகமாக கருதப்படும் குறித்த பொருளுக்கு டபிள்யூ.டி 11 90 எப் என பெயரிடப்பட்டுள்ளது.
0 Comments