ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள்.
கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொட ங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புட்டினும் திடீரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தி யுள்ளனர். இதில் சிரியா பிரச் சினை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


0 Comments