முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
தலைநகர் புதுடெல்லியில் உள்ள குஷி என்ற ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்று உள்ளது. இங்குள்ள குழந்தைகளுக்கு, பணக்காரர்களின் வீட்டு பிள்ளைகளைப்போல் அவர்கள் விரும்பிய உணவு வகைகளை எல்லாம் உண்ணும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பான உணவு வகைகளை கொண்டு விருந்தளிக்க சில தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கருதினர். அதற்காக, டெல்லியில் உள்ள 5 ஸ்டார் உணவகங்களில் இருந்து மிகச்சிறந்த சமையல்காரர்களை ஏற்பாடு செய்து வரவழைத்தனர்.
ஆனால், இதனை அந்த குழந்தைகளுக்கு கடைசி வரை தெரியாமல் பார்த்து கொண்டு, நேற்று குழந்தைகள் தினமும் அதுவுமாக வண்ணவண்ண பலூன்கள் மற்றும் பீட்சா, பர்கர், ஹாட் டாக், டோநட் உள்ளிட்ட சென்று அவர்கள் ஆச்சர்யப்படுத்தினர். பின்னர் அந்த பெண் குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.
மேலும், அந்த குழந்தைகளுக்கு விருப்பமான பல்வேறு உணவு வகைகளை சமைத்து வழங்கினர். மதிய உணவினை குழந்தைகளுடன் முடித்த அந்த ஐந்து நட்சத்திர சமையல்காரர்கள் பின்னர் அவர்களுடன் விளையாடி மகிழந்தனர். இறுதியில் தங்களுக்கு விருந்தளித்த அவர்களுக்கு குழந்தைகளும் அன்போடு நன்றி சொல்லி வழியனுப்பினர்.


0 Comments