Subscribe Us

header ads

ஆன்லைன் வர்த்தக மோசடி: மலிவு விலை ஐபேட் ஆர்டர் செய்தவருக்கு பேப்பரை அனுப்பிய நிறுவனம்

கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபேட் ஏர் 2, சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இணையதளம் ஒன்றில் சமீபத்தில் இதன் தள்ளுபடி விலை வெறும் ஆறாயிரத்து அறுநூறு (100 அமெரிக்க டாலர்) மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தன்னை மாபெரும் பாக்கியசாலியாகக் கருதிய ஒருவர், உடனடியாக இந்தத் தள்ளுபடியிலேயே ஐபேட் ஏர் 2-வை வாங்கினார். வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டதும் அந்த ஐபேடை ஆசையாகப் பிரித்துப் பார்த்தவருக்கு, அது வெறும் பேப்பர் என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.


ஐபேடின் முன்புறம் போன்ற பிளாஸ்டிக் அட்டைப் படத்துடன் கார்ட்போடை வைத்து, பின்புறத்தை டேப் அடித்து நிஜமான ஐபேடை போலவே, வைத்திருந்தனர்.

Post a Comment

0 Comments