Subscribe Us

வட மேல் மாகாண மட்ட மீலாத்.! புத்தளம் சாஹிரா மூன்று போட்டிகளில் முதலிடம்.!!

அண்மையில் வட மேல் மாகாண மட்டத்தில் இடம் பெற்ற இவ்வருட (2015) மீலாத் போட்டிகளில் மூன்று போட்டிகளில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி முதலிடங்களைப் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் எதிர்வரும் வாரம் கொழும்பில் இடம் பெற உள்ள தேசிய மட்ட மீலாத் போட்டிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 

அதன் விபரம் வருமாறு:

1. எம்.எம்.அப்துல்லாஹ்.- கனிஷ்ட பிரிவு- ஆங்கிலப் பேச்சு- முதலாமிடம் 

2. எம். சிஹான்- இடைநிலைப் பிரிவு- அரபுப் பேச்சு - முதலாமிடம் 

3. க.பொ.த.உ /த மாணவர்கள்- நாடகம்- முதலாமிடம் 

இதேவேளை பின்வரும் மாணவர்கள் 2ஆம் 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்:

1. எம்.என்.எம்.அகீல்-கனிஷ்ட பிரிவு-அரபுப் பேச்சு- இரண்டாமிடம் 

2. எம்.பாதிக்-சிரேஷ்ட பிரிவு- அல்கிராத்- இரண்டாமிடம் 

3. எம்.ஏ.ஆதில் இஸ்மாயில்-இடைநிலைப் பிரிவு- தமிழ்ப் பேச்சு- மூன்றாமிடம்.


-Mohamed Muhsi-

Post a Comment

0 Comments