Subscribe Us

header ads

மகளால் நாய் கூண்டில் அடைக்கப்பட்ட தந்தை உயிரிழப்பு: சடலத்தை அவரிடம் வழங்கவும் மறுப்பு

கண்டி பிரதேசத்தில்  தனது  சொந்த மகளால் நாய் கூண்டில் தங்க வைக்கப்பட்டிருந்த  தந்தை கண்டி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

73 வயதான எம்.ஜீ. சுமதிபால என்ற பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த அந் நபர் கண்டி மேலதிக நீதவான்  ஸ்ரீனித் விஜயசேகரவின் உத்தரவின் பேரில் கடந்த 2ம் திகதி அம்பிடிய முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் தனது மகளால் நீண்ட காலமாக வீட்டிற்கு முன்னால் உள்ள கூண்டில்
பராமரிக்கப்பட்டிருவந்தார். கதைப்பதற்கோ அல்லது எதையும் புரிந்து கொள்ளும் தன்மை அற்றவராக அவர் இருந்ததாகவும் அவரது மகள் தெரிவித்திருந்தார்.

கூண்டில் வைக்கப்பட்டிருந்தாலும் தாம் தந்தையை நன்றாக பராமரித்ததாக அந்த பெண் கூறியிருந்தார். எனினும் அப் பெண் தனது வீட்டினுள் நாய்களுக்கு அறையொன்றை ஒதுக்கி வளர்த்து வந்திருந்தார்.

இச்சம்பவம் நாடுபூராகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் அத் தந்தை முதியோர் இல்லத்துக்கு சேர்க்கப்பட்ட பின் அவரது உடல் நிலை மோசமானதால் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை அந்த பெண்ணுக்கு கொடுப்பதற்கு மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments