மழைக்காலம் என்றாலே காய்ச்சலும் கூடவே வந்து விடும். இதனால் தொடர் இருமல், தடிமல் கூடவே உடல் வெப்பமும் அதிகரித்து காணப்படும்.
வெங்காயமும் கால் பாதங்களும் காய்ச்சலையும் அது தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்தும் என நமது பாரம்பரிய வைத்தியங்களில் கூறப்பட்டுள்ளது.
கால் பாதங்களுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. பாதங்களில் இருந்து பெறப்படும் செய்திகளை மூளை உள்வாங்கிக்கொண்டு உடனுக்குடன் நமது உடலை அது சரிசெய்து கொள்கிறது.
கால் பாதங்களுக்கடியில் வெங்காயம் வைத்து கட்டு போடுவது என்பது காய்ச்சல் மற்றும் அது தொடர்பான நோய்களை கட்டுப்படுத்துவதில் உடனடி நிவாரணம் தரக்கூடியதாகும்.
எனவே, கடைகளில் பரவலாக கிடைக்கும் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னர் நாம் பாரம்பரிய சிகிச்சை முறைகளை பின்பற்றி காய்ச்சலை இலகுவாக குணப்படுத்தலாம்.
0 Comments