Subscribe Us

header ads

வட கிழக்கில் இடம் பெயா்ந்த முஸ்லீம்கள் சம்பந்தமாக நேற்று ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம்

வட கிழக்கில் இடம் பெயா்ந்த முஸ்லீம்கள் சம்பந்தமாக நேற்று (11) திகதி பி.பகல 2.மணிககு ஜனாதிபதித் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று  நடைபெற்றது. 

இதில் அமைச்சா்களான  ரவுப் ஹக்கீம் ,டி.எம். சுவாமிநாதன், றிசாத் பதியுத்தீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயா கமகே, சஜித் பிரேமதாச, லக்ஸ்மன் கிரியெல்ல,  டொக்டா் ராஜித்த சேனாரத்தின, கிழக்கு முதலமைச்சா் நசீர் அஹமட்  மற்றும் வடக்கு ,கிழக்கு ஆளுணா்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

 வட கிழக்கில் இடம்பெயா்ந்த முஸ்லீம்களை மீளக் கூடியேற்றுவது சம்பந்தமாக  மாகாண ஆளுணா். முதலமைச்சா்கள் கொண்ட குழுவும் தேசிய மட்டத்தில் ஜனாதிபதி தலைமையிலும ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் தேசிய மட்டத்திலும், 3மாதத்திற்கு ஒரு தடவை ஜனாதிபதி மட்டத்திலும கூடி வட கிழக்கு இடம் பெயாந்த மக்களின் சரியான தரவு, அவா்களை மீளக் குடியமா்த்த நிலவுகின்ற சிக்கல்களை இனம் கண்டு அவற்றை தீா்த்து துரிதமாக குடியமா்த்துவதற்கான திட்டம் வகுக்கப்பட உள்ளன. மேற்கண்டவாறு

அமைச்சா்காளன றிசாத் பதியுத்தீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனா்.

-அஸ்ரப் ஏ சமத்

Post a Comment

0 Comments