Subscribe Us

header ads

மழை அதிகரித்தால் ஓதும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதிக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்

தொடர்ந்து சில நாட்களாக நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் ஜம்இய்யாவின் பிராந்திய கிளைகள், பள்ளிநிர்வாகிகள் சம்மேளனங்கள், நலன் விரும்பிகள் அனைவரும் தம்மாலான இயன்ற உதவி, ஒத்தாசைகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக்குழு அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.

பாதிப்படைந்தவர்கள் இயல்பு நிலைக்கு மிக விரைவில் திரும்ப அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுடன், தேவையை விட மழை அதிகரித்தால் ஓதும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதிக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.

اللهُمَّ حَوالينَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ – صحيح مسلم -

அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அல்-பாஸி
செயலாளர் – சமூக சேவைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment

0 Comments