பிரான்சின் , பாரிஸ் நகர தாக்குதல் திட்டத்தை தீட்டியவர் என கருதப்படும் அப்துல்ஹமீட் அபாவுட் கொல்லப்பட்டமையை பிரான்ஸ் நேற்று அறிவித்தது.
27 வயதான , பெல்ஜியப் பிரஜையான அவரின் மரணம் , மரபணு பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
' செயிண்ட் - டெனிஸில் ' இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார்.
சுமார் 6 மணித்தியால துப்பாக்கிச் சண்டையின் பின்னரே அபாவுட் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்னைபர் தாக்குதல் நடத்தப்பட்ட துடன் , கைக்குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அபாவுட் இதற்கு முன்னரும் பிரான்சில் நான்கு முறை தாக்குதல் முயற்சி நட த்தியுள்ளதாகவும் அவரை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்துல்ஹமீட்அபாவுட் , பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ் இயக்கத்தில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரது 13 வயது சகோதரனையும் இவ்வியக்கத்தில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர் பல்வேறு ஐரோப்பா நாடுகளுக்கு பயணித்து , பல நாசகார செயல்களுக்கு திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இச்சம்பவத்தில் ஐரோப்ப உளவுத்துறையின் செயற்பாடு மற்றும் இயலுமை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
0 Comments