Subscribe Us

header ads

புத்தளம் மாவட்டத்தின் தலைநகரமான புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் ஏற்பாடு

புத்தளம் மாவட்டத்தின் தலைநகரமான புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பிலும்,வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களுடன் கலந்துரையாடலொன்றுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றது.

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களின் வேண்டுதலின் பேரில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட நேரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையான குளிருட்டப்பட்ட பிரேத அறை தொடர்பிலும்,காணப்படும் சில குறைபாடுகளை உடன் நீக்குவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புத்தளம் ஆதார வைத்தியசாலை மாவட்டத்தின் முக்கிய வைத்தியசாலை என்றும்,வடமாகாண மக்களினது மருத்துவ தேவைகளையும் நிறைவு செய்துவருவதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-Irshard Rahumathullah-

Post a Comment

0 Comments