Subscribe Us

மூவின மக்களுக்கும் சமாந்திரமான சேவையை முன்னெடுப்பேன் - சுகாதார அமைச்சர் நஸீர் (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் தனது அமைச்சின் கடமைகளை நேற்று காலை (02) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண சுகாதார முன்னாள் அமைச்சரும் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அமைச்சின் உதவிச் செயலாளர்களான ஜே.ஹூசைனுதீன், பிர்னாஸ் இஸ்மாயில் மற்றும் திணைக்களத் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.

சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றுகையில்,

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன். இந்த அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும் சுகாதார, சுதேச வைத்தியத்துறையை முன்னேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கான வைத்திய சேவையை செய்யும் வகையில் பாரிய பங்களிப்பைச் செய்யவுள்ளேன்.

இந்த அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள மூவினமக்களும் ஒரே பார்வையில் பார்க்கப்பட்டு மிகச் சமாந்திரமான முறையில் எனது சேவையை முன்னெடுப்பேன் என்றார்.

அபு அலா -






Post a Comment

0 Comments