Subscribe Us

header ads

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது.


அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை.

கடைசியாக நொந்து போய் கடவுளுக்கு கடிதம் எழுதினான் கடவுளே எனக்கு அவசரமாக 50 டாலர்கள் தேவை அனுப்பி வைக்கவும்ன்னு எழுதி அதில் பெறுநர் முகவரியாக கடவுள் அமெரிக்கா ன்னு எழுதி இருந்தான்.

இந்த வேடிக்கையான கடிதம் ஒபாமாவின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது ஒபாமாவும் சிறுவனின் நம்பிக்கை வீணடிக்க விரும்பாமல் பணத்தை அனுப்ப முடிவு செய்தார் ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 50 டாலர்கள் மிக அதிகம் என நினைத்து தனது சொந்த பணத்திலிருந்து 30 டாலர் பணத்தை மட்டும் அந்த சிறுவனின் முகவரிக்கு அனுப்பினார்.

அதில் அனுப்புநர் முகவரியாக ஒபாமா வெள்ளை மாளிகை அமெரிக்கா ன்னு எழுதி அனுப்பினார்.

இரண்டு நாட்களில் அதே சிறுவனிடமிருந்து கடவுள் முகவரிக்கு பதில் கடிதம் வந்தது.

எனது கஷ்டத்திக்கு பணம் குடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி ஆனால் இனிமேல் எனக்கு பணம் அனுப்பும் போது நேரடியாக எனது முகவரிக்கு அனுப்பவும் ஏன் என்றால் நீங்கள் ஒபாமா மூலமாக அனுப்பினால் அவர் பாதி பணத்தை ஆட்டையை போட்டுவிடுகிறார்.

அதனால் தான் சொல்கிறேன் என்று எழுதியிருந்தது..... என்னம்மா ஒபாமா .... இப்படி பண்றீங்களேமா ???

Post a Comment

0 Comments