லொறி ஒன்றில் பெப்சி கேன்களை போன்று கடத்த முயற்சி  செய்த 48,000 பியர் கேன்ககளை சவுதி சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று(12\11\15) அமீரகத்திலிருந்து (U.A.E) சவூதி அரேபியா சென்ற லொறியில் கொண்டுசெல்லப்பட்ட பியர் கேன்களை முதலில் பெப்சி என்று நினைத்து சவுதிக்குள் கொண்டு செல்ல அனுமதித்துள்ளனர்.

பின்னர் சிறிது சந்தேகம் எழுந்ததால் குறித்த கேன்களை சவுதி அதிகாரிகள் பரிசோதனை செய்த போது போலியாக பெக்கட் செய்யப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.