Subscribe Us

header ads

முதலமைச்சரினால் 48 பயனாளிகளுக்கு வீடமைப்புக்கான நிதி வழங்கிவைப்பு (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் நிதியில் இருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபையின் 2015-  PSDG நிதியில் இருந்து கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மூலம் 48 பயனாளிகளுக்கு 100,000 ரூபாய்கள் வீதம் வழங்க திட்டமிட்டு முதற்கட்டமாக 40,000 ரூபாய்கள் வீதம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் வழங்கிவைக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக,40,000 ரூபாய்களும் அதன் பின்னர் 20,000 ரூபாய்களும் மீண்டும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, மாகாணசபை உறுப்பினர் துரை ரட்ணம் ஆகியோரும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

-CM MEDIA-










Post a Comment

0 Comments