முன்னணி மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி 2 ஆயிரம் பேரின் வங்கி தகவல்களை திருடியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இங்கிலாந்தை சேர்ந்த 1827 வோடபோன் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண்கள், குறியீட்டு எண்கள், பெயர், முகவரி ஆகிய தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. மேற்கூறிய தகவல்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்படும் நோக்கத்துடன் இந்த திருட்டு நடைபெற்றுள்ளதாகவும் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை திருடப்பட்ட தகவல்களை கொண்டு 10-க்கும் குறைவானவர்களின் வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால், மற்ற வாடிக்கையாளர்கள் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். மற்றும் கடன் அட்டைகளின் ரகசிய குறியீட்டு எண்கள் திருடப்படவில்லை என்பதால் அதிகம் கவலைப்பட தேவையில்லை என்று வோடபோன் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
0 Comments