Subscribe Us

header ads

இலங்கைக்கு வருடாந்தம் 1௦௦ பில்லியன் செலவில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


இலங்கைக்கு வருடாந்தம் 1௦௦ பில்லியன் செலவில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தின்  (2016 - 2018)  மூலம் இந்த செலவினை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த முடியும்.  

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில், இன்று (16) வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெற்ற, உணவுற்பத்தி தேசிய செயற்திட்டம் (2016 - 2018) தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்

மேலும் அமைச்சர் உரையாற்றுகையில், 

இலங்கைக்கு வருடாந்தம் 1௦௦ பில்லியன் செலவில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தை (2016 - 2018) அமுல்படுத்துவதன் மூலம் இந்த செலவினை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதினால் நாட்டை அபிவிருத்திப் பாதையினை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு தேசிய கொள்கையை இந்த நாட்டில்  அறிமுகப்படுத்தி இருக்கிறார். எம்மிடம் இருக்கின்ற வளங்களை சரியாக பயன்படுத்தாத காரணத்தினாலும், வட, கிழக்கு பிரதேசத்திலே இடம்பெற்ற யுத்தத்தினாலும் எத்தனையோ உணவுப்பொருட்களை இறக்குமதி செய்கின்ற ஒரு நாடாக நாம் இருந்துகொண்டிருக்கின்றோம். குறிப்பாக அரிசியை கூட இறக்குமதி செய்தோம். சமாதானத்திற்கு பிறகு வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே விவசாயத்துறை மேம்படுத்தப்பட்ட பின் நாங்கள்  ஓரளவு தன்னிறைவடைந்த நாடாக விவசாயத்துறையிலே முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இந்த வருடம் அரிசி, இருங்கு இறக்குமதி செய்யப்படவில்லை. இவ்வாறு நாம், எத்தனையோ இறக்குமதி பொருட்களை திட்டமிட்டு, இறக்குமதி செய்வதை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியிலேயே தங்கியிருக்கின்ற படி நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம். இந்த நடைமுறையின் பிரகாரம் எமது நாடு விவசாயத்துறையிலே முன்னேறி சென்றுகொண்டிருக்கின்றது.

அதேபோல் கடந்த மாதம் ஜனாதிபதி அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த போது, உரையாற்றுகையிலே, இந்த நாட்டை  இன்னும் ஐந்து வருட காலங்களுக்குள் விவசாயத்துறையிலே ஒரு புரட்சி மிக்க, வளர்ச்சியடைந்த, ஏற்றுமதி செய்கின்ற நாடாக மாற்றுவதாக தெரிவித்திருந்தார். அதற்கொப்ப கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் விவசாயத்துறை அமைச்சர், அமைச்சரவையிலே ஒரு பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். அந்த பத்திரத்திற்கிணங்க கடந்த 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலே ஒவ்வொரு மாவட்ட சபையிலும் இந்த தேசிய கொள்கையினை பிரகடனப்படுத்தி அதை எவ்வாறு  முன்னெடுத்துச் செல்வது என்பதற்கான கூட்டங்கள் கூட்டப்படுகின்றன. எனவே நாங்கள் இன்று வவுனியா மாவட்டத்திலும் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்க்றோம். குறிப்பாக வவுனியா மாவட்டம் அதிகமாக விவசாயிகளை கொண்ட மாவட்டம் ஆகும். மேலும் விவசாயம் செய்யக் கூடிய நிலங்கள் எதிர்காலத்திலே விவசாயம் செய்யப்படாமல் இருந்தால் அவற்றை அரசுடமையாக்குவதாகவும் அல்லது தற்காலிகமாக அரசு பெற்று அவற்றை விவசாயத்திற்காக பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் அண்மையில் அறிவித்திருந்தார். 

எனவே பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் உற்பட அனைவரும் ஒன்றிணைந்து   விவசாயிகளுக்கு உதவி செய்கின்ற சமூகமாக, இருக்க வேண்டும். அதேபோல், விவசாயத்துரையிலே புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, யுத்தம் காரணமாக  நீண்ட காலமாக விவசாயம் செய்யப்படாமல் இருந்த பிரதேசங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிரதேசங்களாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அமைச்சர் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  செய்திருந்த அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, மாவட்ட பணிப்பாளர் திருமதி.ஈஸ்வரன் உற்பட  ஏனைய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

-Irshath Rahumathulah-

Post a Comment

0 Comments