Subscribe Us

header ads

நாம் தாக்கியதால் பிரபாகரனும் 'பங்கருக்குள்' , அவர் தாக்கியதால் நாமும் 'பங்கருக்குள்' -மஹிந்த (VIDEO)

ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமானதாக கூறப்படும் இரகசிய கட்டிடங்கள் குறித்த புகைப்படங்களும் செய்திகளும் ஊடகங்களிலும் , சமுக வலைத்தளங்களிலும் வெளியாகி இருந்தன.

நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடத்தின் இரண்டு மாடிகள் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணிநேர வளி போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த கட்டிடத்துக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதன் உண்மைத் தன்மை குறித்து எமது செய்திப்பிரிவு ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரச தலைவர்களின் பாதுகாப்புக்காக இவ்வாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது இந்த ரகசிய ஏற்பாடுகள் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட து. இதற்கு பதிலளித்த அவர் பாதுகாப்பு காரணங்களின் பொருட்டே அமைக்கப்பட்ட தாக தெரிவித்துள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாரனும் 'பங்கர்' அமைத்த தாகவும் , அதற்கு காரணம் தாம் தாக்கியமையாலேயே எனவும் , தாம் 'பங்கர்' அமைத்தது , அவர்கள் தாக்கியமையாலேயே எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments