நேற்று (8) 36 ஆவது மாதாந்த கூட்டம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றவேளை சபையில் பிரசன்னமாக இருந்த வட மாகாண சபை முஸ்லீம் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தங்களது ஆதங்கங்களை தெரிவித்தனர்.
முதலில் சபையில் திடிரென எழுந்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இம்மாகாணத்தில் சுயநலமாக நாம்(வட மாகாண சபை) செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.தமிழ் பேசும் மக்கள் முஸ்லீம்கள் என கூறிக்கொண்டு இருக்கின்றீர்கள் யாராவது அவர்களுக்கு இதுவரை குரல் கொடுத்தீர்களா என வினவினார்.
இதன் போது இடையே குறுக்கிட்டு பேசிய அவைத்தலைவர் றிப்கான் பதீயுதீனை விழித்து நீங்கள் இருக்கிறீங்கள் தானே என கேட்டார்.
அப்போது றிப்கான் பதியுதீன் 1990 ஆண்டு முஸ்லீம் மக்களிற்கு நடந்த வெளியேற்றத்திற்கு ஏதாவது செய்ய முற்பட்டால் இயலாத காரியமாக உள்ளது என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மற்றுமொரு மாகாண சபை உறுப்பினரான
சுகிர்தன் தமிழ் மக்களின் காணிகளில் பலவந்தமாக முஸ்லீம் மக்கள் அப்பகுதி அமைச்சர் ஒருவரினால் குறிப்பாக முல்லைத்தீவு குடியமர்த்தபட்டு வருகின்றனர்.இதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வது என அவையோரை பார்த்து கேட்டார்.
அப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஜனுபர் தேவையற்ற விடயங்களை குறித்த உறுப்பினர் கதைப்பதாக சுட்டிக்காட்டியதுடன் எமது விடயங்களை நாமே பேசித்தீர்க்க முன்வர வேண்டும் என கேட்டார்.
இதனிடையே வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் முஸ்லீம் மக்களிற்காக மாகாண சபையின் ஆளும் தரப்பினர் குரல் கொடுக்கவில்லை என்ற கருத்தினை ஏற்க முடியாது.இது தொடர்பாக அறிய சம்பந்தப்பட்டவர்கள் ஹன்சாட் அறிக்கையை எடுத்து பார்க்க வேண்டும்.எத்தனை தடவைகள் அம்மக்களிற்காக பேசப்பட்டுள்ளது என்பதை அதில் அறியலாம்.அத்துடன் முஸ்லீம் மீள்குடியேற்றம் அவர்களது பிரச்சினை குறித்து பல பிரேரணைகள் உள்ளன என தெரிவித்தார்.
சபையின் நிலைமை இவர்களின் வாதங்களால் வேறு திசை நோக்கி பயணிக்கின்றது என்பதை அறிந்த அவைத்தலைவர் உடனடியாக அனைவரையும் சமரசப்படுத்தி அவ்விடயத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.


0 Comments