Subscribe Us

header ads

Update..... ஆப்கான் நிலநடுக்கம்: கூட்ட நெரிசலில் சிக்கி 12 பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு ...

இன்று மதியம் 2.39 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்த்குஷ் பகுதியை மையமாக வைத்து காபுல் நகரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில், ஜார்ம் என்ற இடத்தின் அருகே பூமியின் 213.5 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.7 ஆக பதிவாகியிருந்தது.

காபுல் நகரில் மட்டும் ஒரு நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இங்குள்ள வீடுகள், கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் படுவேகமாக குலுங்கின. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடிவந்து வீதி, சாலை போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் உண்டான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான முதல்கட்ட தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது. தக்கர் மாகாணத்தில், நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியினால் பள்ளியில் இருந்து அவசரமாக வெளியேற முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 சிறுமிகள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு கல்வித்துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் 35 பள்ளி சிறுமிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  

Post a Comment

0 Comments