டெல்லியில் பருப்பு சாப்பாடு தொடர்பாக நடந்த சண்டையில் தாக்குதலுக்கு உள்ளான ஹோட்டல் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்லியின் சரோஜினி நகரில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்த 8 பேர், குறிப்பிட்ட பருப்பு சாப்பாட்டை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டது வேறுவகை பருப்பு சாப்பாடு என்று கூறப்படுகிறது. இதனால் சாப்பிட வந்தவர்களுக்கும் உணவகத்தின் உரிமையாளர் குல்தீப் சிங்குக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியதில் குல்தீப் சிங் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த குல்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
நாடு முழுவதும் விளைச்சல் பற்றாக்குறை காரணமாக பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.210 அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் டெல்லியில் பருப்பு சாப்பாடு தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments