இலங்கையின் முன்னணி மேற்பூச்சு வகைகள் மற்றும் பூர்த்திசெய்யும் தயாரிப்புகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளதுடன், சர்வதேச வர்த்தக நாமங்களை தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமான JAT ஹோல்டிங்ஸ், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு ITW உடனான பங்காண்மை ஊடாக அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய கிரிக்கெட் வீரர்களான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் மற்றும் மைக்கல் திசேரா ஆகியோரை நினைவுகூறும் வகையில் இந்த போட்டித் தொடருக்கு சோபர்ஸ்-திசேரா போட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஏழு போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடர் ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடர் காலியில் ஆரம்பமாகவுள்ளதுடன், அதைத் தொடர்ந்து மற்றைய மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு இருபதுக்கு இருபது போட்டிகள் போன்றன இடம்பெறவுள்ளன.
இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய கிரிக்கெட் வீரர்களான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் மற்றும் மைக்கல் திசேரா ஆகியோரை நினைவுகூறும் வகையில் இந்த போட்டித் தொடருக்கு சோபர்ஸ்-திசேரா போட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
JAT ஹோல்டிங்ஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலியன் குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,
“பெருமை வாய்ந்த உள்நாட்டு கம்பனி மற்றும் பிராந்தியத்தின் பல நாடுகளில் செயற்பாடுகளை கொண்டுள்ள நிறுவனம் எனும் வகையில், கிரிக்கெட் போட்டிகளுடன் கைகோர்த்துள்ளதையிட்டு நான் பெருமையடைகிறேன்” என்றார்.
“கிரிக்கெட் என்பது பல நாடுகளைச் சேர்ந்த பெருமளவானோரின் விருப்பத்துக்குரிய போட்டியாக அமைந்துள்ளது. பல இலங்கையர்களின் நாளாந்த வாழ்க்கையில் முக்கிய பங்கையும் வகித்து வருகிறது.
துறையின் முன்னோடிகள் எனும் வகையில், பிராந்தியத்தில் எமது செயற்பாடுகளை தொடர்ந்து விஸ்தரிப்பது மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியிருந்தோம். இதற்கு கிரிக்கெட் முக்கிய பங்களிப்பை வழங்கும் என நாம் நம்புகின்றோம்” என மேலும் குறிப்பிட்டார்.
1993 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதல், நவீன, புத்தாக்கமான மற்றும் வினைத்திறன் வாய்ந்த தீர்வுகளை துறைக்கு JAT வழங்கி வருகிறது. தொடர்ச்சியாக வெற்றிகரமாக பயணிக்கும் JAT தற்போது மரத்தளபாடங்கள் மேற்பூச்சுத் துறையில் நிகரற்ற முன்னோடி எனும் நிலையை எய்தியுள்ளது. “சிறந்த 10 உறுதியான நிறுவனசார் வர்த்தக நாமம்” எனும் நிலையையும் JAT பெற்றுள்ளது. அத்துடன், “get the right finish first” எனும் தொனிப்பொருளையும் பின்பற்றி வருகிறது.

0 Comments