Subscribe Us

header ads

முஸ்லிம் பெண்களின் திருமணம் சுமுகமாக நடைபெற திருமணத்துக்கு உதவிய ஹிந்துக்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பிஷாடா கிராமத்தில், முஸ்லிம் பெண்களின் திருமணம் சுமுகமாக நடைபெறத் தேவையான உதவிகளை ஹிந்துக்கள் செய்தனர்.

பிஷாடா கிராமத்தில் இன்னும் பதற்றம் தணியாமல் இருப்பதால் அங்கு வசித்துவந்த ஹக்கீம் என்பவர் தனது இரண்டு பெண்களின் திருமணத்தை தனது கிராமத்திலேயே நடத்தலாமா? அல்லது வேறு இடத்தில் நடத்தலாமா? என்று யோசித்து வந்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக அந்த கிராம ஹிந்துக்கள் “இந்த கிராமத்திலேயே திருமணத்தை நடத்துங்கள்’ என்று ஹக்கீமிடம் கூறியதுடன், திருமணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்தனர்.

பிஷாடா கிராமத்தில், மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி இக்லாக் (50) என்பவர் அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பிறகு, அவருடைய மகன் தனீஷ் (22) என்பவரையும் அடையாளம் தெரியாத சிலர் தாக்கினர். அதில் அவர் பலத்த காயமடைந்து தற்போது தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Post a Comment

0 Comments