Subscribe Us

header ads

Breaking News... புத்தளத்தில் 16 வயதான மகளுடன் உறவு கொண்டு கர்ப்பிணியாக்கிய தந்தை

16 வயதான மகளுடன் உறவு கொண்டு கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின்  தாயார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரான தாய் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கணவரைப் பிரிந்து கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளையும் சந்தேகநபர் பொறுப்பில் உள்ளதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தனது மூத்த மகள் சுகவீனமுற்றிருப்பதாக அறியக் கிடைத்ததை அடுத்து ஆராய்ந்து பார்த்த வேளை அவர் ஆறு மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தனது மகளை துஷ்பிரயோகம் செய்தது தனது கணவர் என, தன்னிடம் அவர் குறிப்பிட்டதாகவும் தாய் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. புத்தளம் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments