தூக்குத் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு வெளிக்கடை சிறைச்சாலையிலுள்ள கம்பொலயைச் சேர்ந்த விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவுடன் இரகசியத் தொடர்பு வைத்துள்ள சிறைச்சாலை அதிகாரிகளை கண்டறியும் பணி, விசேட புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் உள்ள பல்வேறு வகையான தரங்களையுடைய கைதிகளுக்கு உதவி வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் அடிக்கடி தகவல்கள் வெளியாகியவண்ணமேயுள்ளன. வெலே சுதாவுக்கும் உதவி வழங்கும் அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் இருக்கக் கூடும்.
எந்தவொரு தேவையும் இன்றி, வெலே சுதா தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையின் அருகில் யாராவது அதிகாரிகள் சென்றால், அவர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்து, தண்டனை வழங்கப்படுவார்கள் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
0 Comments